வங்கியில் கிடைக்காவிட்டால் என்ன? கலர் ஜெராக்ஸ் எடுத்த இளைஞர்கள். அதிர்ச்சி தகவல்
செல்லாது என்று அறிவிக்கப்பட்ட ரூ.500, ரூ.1000க்கு மாற்றாக அனைத்து வங்கிகளிலும் தற்போது ரூ.2000 நோட்டு வழங்கப்பட்டு வருகிறது. ஆனால் கடந்த ஒரு வாரமாக இரண்டே இரண்டு ரூ.2000 நோட்டை மாற்ற மணிக்கணிக்கில் ஏன் சிலசமயம் காலை முதல் மாலை வரை வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
இந்நிலையில் வரிசையில் ஏன் கால் கடுக்க காத்திருக்க வேண்டும் என்று நினைத்து புதிய 2000 ரூபாய் நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்து விநியோகிக்க முயன்ற இளைஞர்ககைது செய்யப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தெலுங்கானா மாநிலத்தில் நடைபெற்றுள்ளது.
தெலங்கானா மாநிலத்தின் மஹாபுபபாத் மாவட்டத்தில் உள்ள குருவை மண்டல் என்ற பகுதியை சேர்ந்த பெட்ரோல் பங்க் ஒன்றில் இளைஞர் ஒருவர் தனது வாகனத்திற்கு 200 ரூபாய்க்கு பெட்ரோல் நிரப்ப வேண்டும் என கூறி பெட்ரோல் நிரப்பிய பின்னர் ரூ.2000 புதிய ரூபாயை கொடுத்துள்ளார்.
அந்த நோட்டு சந்தேகம் அடையும் வகையில் சாதாரண நோட்டாக இருந்ததால் சந்தேகம் அடைந்த ஊழியர் உடனடியாக காவல்துறைக்கு தகவல் தெரிவித்தார். காவல்துறையினர் விரைந்து வந்து விசாரித்ததில் அந்த இளைஞரின் பெயர் பிரதீப் என்றும், அவரும் அவருடைய நண்பர் அனில் என்பவரும் சேர்ந்து ரூ.2000 நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்ததும் தெரிய வந்துள்ளது. இருவரின் வீட்டிலும் வேறு ஏதும் ரூ.2000 நோட்டு கலர் ஜெராக்ஸ் பிரதிகள் உள்ளதா என காவல்துறையினர் சோதனை நடத்தி வருகின்றனர்.