தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் சிவனை தேடி குழிதோண்டிய பக்தர் கைது
தெலுங்கானா மாநிலத்தில் சிவபெருமான் கனவில் வந்து கட்டளையிட்டதாக கூறி, தேசிய நெடுஞ்சாலையில் குழி தோண்டி போக்குவரத்துக்கு இடைஞ்சல் ஏற்படுத்திய சிவபக்தர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தெலுங்கானாவின் ஜான்கான் மாவட்டம் பெம்பார்தி கிராம் பகுதியில் ஹைதராபாத் – வாராங்கால் தேசிய நெடுஞ்சாலையில் எப்போதும் பிசியாக வாகனங்கள் சென்று கொண்டிருக்கும். இந்த தேசிய நெடுஞ்சாலையில் சிவலிங்கம் சிலை இருப்பதாகக் கூறி சாலையைத் தோண்ட வேண்டும் என்று லாகான் மனோஜ் என்ற சிவ பக்தர் கிராம பஞ்சாயத்து தலைவர், நகராட்சி அதிகாரிகளிடம் அனுமதி கேட்டார். இதற்கு இந்த அதிகாரிகளும் ஒப்புக்கொண்டனர்.
இதனையடுத்து அந்த நெடுஞ்சாலையில் பூஜை போட்டு தொண்டத் தொடங்கினார் அந்த பக்தர்.. ஆனால் சுமார் 12 அடி ஆழத்திற்கு மேல் தோண்டியும் ஒன்றும் கிடைக்கவில்லை. இந்நிலையில் நடுரோட்டில் குழி தோண்டியதால் அந்த பகுதியில் உள்ள வாகனங்களுக்கு சிக்கல் ஏற்பட்டது. டிராபிக் நெருக்கடியும் அதிகரித்துள்ளது. இதுகுறித்து தகவல் அறிந்து வந்த போலீசார் சிவ பக்தரையும் அவருக்கு தோண்ட அனுமதி அளித்தவர்களையும் கைது செய்தனர்.