பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய துணை முதல்வர். தெலுங்கானாவில் ஒரு ஆச்சரியம்

பள்ளிக்கு சென்று பாடம் நடத்திய துணை முதல்வர். தெலுங்கானாவில் ஒரு ஆச்சரியம்

கடந்த சில வருடங்களாக தமிழகத்தில் முதல்வர் என்றால் அணுக முடியாதவர் என்று இருக்கும் நிலையில் நமது பக்கத்து மாநிலங்களான கேரளா, ஆந்திரா, தெலுங்கானா ஆகிய மாநிலங்களின் முதல்வர்கள் எளிமையின் மொத்த உருவமாக உள்ளனர். இந்நிலையில் தெலங்கானா மாநிலத்தின் துணை முதல்வர் கடையம் ஸ்ரீஹரி, நேற்று திடீரென ஒரு பள்ளிக்குச் சென்று ஆசிரியராக மாறி, மாணவர் களுக்கு பாடம் நடத்தி அனைவரயும் ஆச்சரியப்படுத்தினார்.

நேற்று வாரங்கல் என்ற பகுதியில் கட்சி பணி ஒன்றின் காரணமாக வருகை தந்த துணைமுதல்வர் ஸ்ரீஹரி, திடீரென அங்கு இருந்த ஒரு பள்ளிக்குள் சென்றார். துணை முதல்வரின் வருகையை பார்த்து மாணவர்களும் ஆசிரியர்களும், அதிர்ச்சியும் ஆச்சரியமும் அடைந்தனர். பின்னர் 10ஆம் வகுப்பு ஒன்றுக்கு சென்ற ஸ்ரீஹரி மாணவர்களுக்கு சிறிது நேரம் பாடம் எடுத்தார்.

இந்த சமயத்தில் கோடை வெயில் அதிகரித்துள்ளதால் உடனடியாக விடுமுறை வேண்டுமென மாணவர்கள் கோரிக்கை வைத்தனர். இதுகுறித்து தொலைபேசி மூலம் முதல்வர் கே.சந்திரசேகர ராவிடம் இந்தத் தகவலை அவர் தெரிவித்தார்.

பின்னர் அவர் கூறும்போது, “வரும் 23-ம் தேதி வரை பள்ளிகள் செயல்பட வேண்டி உள்ளது. ஆனால் மாணவர்களின் கோரிக்கையை ஏற்ற முதல்வர், வியாழக்கிழமை (இன்று) முதல் பள்ளிகளுக்கு கோடை விடுமுறை அளிக்க உத்தரவிட்டார்” எனத் தெரிவித்தார். இதை அறிந்த மாணவர்கள் துணை முதல்வருக்கு நன்றி தெரிவித்துக்கொண்டனர்.

Leave a Reply