பெண் ஐ.ஏ.எஸ் அதிகாரி ஒருவர் தெலுங்கானா மாநிலத்தில் தன்னுடைய அழகால் தொடர்ந்து பதவி உயர்வு பெற்று வருவதாக பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இந்த செய்தியால் ஆவேசம் அடைந்துள்ள அந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி குறிப்பிட்ட அந்த பத்திரிகைக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.
தெலுங்கானா மாநிலத்தில் அரசுத்துறையில் பணிபுரிந்து வரும் பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா சபர்வால். இவர் சமீபத்தில் முதல்வர் சந்திரசேகரராவின் செயலாளராக நியமனம் Telungana IAS officer get promotion for her beauty?செய்யப்பட்டார். இந்த அதிகாரி தன்னுடைய அபாரமான அழகால் அனைவரையும் கவர்ந்து அடுத்தடுத்து பதவி உயர்வு பெற்று வருவதாக பிரபல ஆங்கில வார இதழ் ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது. மேலும் இந்த அதிகாரியின் பெயரை குறிப்பிடாமல் அவரது அழகு, அவர் உடை அணியும் விதம், பணியில் பதவி உயர்வுக்கு மேல் பதவி உயர்வு வாங்கியதாகவும் இந்த பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அதுமட்டுமின்றி சமீபத்தில் நடந்த பேஷன் ஷோ ஒன்றில் ஜீன்ஸ் பேண்ட் மற்றும் பிரில் வைத்த சட்டை அணிந்து அனைவரையும் ஆச்சரியபடுத்தியதாக குறிப்பிட்டுள்ள அந்த பத்திரிகை இதுகுறித்து கேலிச்சித்திரம் ஒன்றையும் வெளியிட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த செய்தி வெளியானதும் கடும் ஆவேசமடைந்த பெண் ஐ.ஏ.எஸ். அதிகாரி ஸ்மிதா “என்னை ஆபாசமாக சித்தரித்ததற்காக பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டு. என்னைப் பற்றி தவறான கண்ணோட்டத்தில் கீழ்த்தரமாக அந்த செய்தி சித்தரிக்கப்பட்டுள்ளது. எனவே 15 நாளில் மன்னிப்பு கேட்க வேண்டும்” என எச்சரித்துள்ளார்.
மக்களின் அதிகாரி என்று பெயர் எடுத்த ஸ்மிதா மேற்கு வங்காளத்தை சேர்ந்தவர். 1977 ஆம் ஆண்டு பிறந்தார். 2001 ஆம் ஆண்டு நடந்த ஐ.ஏ.எஸ். தேர்வில் இந்திய அளவில் 4 ஆவதாகத் தேர்ச்சி பெற்றார். ஒருங்கிணைந்த ஆந்திராவில் சித்தூர் மாவட்டத்தில் உள்ள மதனபள்ளியில் துணை ஆட்சியராகப் பொறுப்பேற்றார். பல ஆண்டுகள் ஆந்திராவில் பணியாற்றிய பிறகு அவர் கடந்த 2011 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் கரீம்நகர் மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டார். 2014 ஆம் ஆண்டு ஜூன் மாதம் முதல் தெலுங்கானா முதல்வர் சந்திர சேகரராவின் செயலாளராகப் பொறுப்பு வகித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.