சென்னை சீர்திருத்த பள்ளியில் இருந்து 10 சிறுவர்கள் தப்பி ஓட்டம். பெரும் பரபரப்பு.

jailசென்னை சிறுவர் சீர்திருத்த பள்ளியில் இருந்து பத்து சிறுவர்கள் தப்பி ஓட்டி ஓடிவிட்டதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. சென்னை கெல்லீஸ் பகுதியில் தமிழக் சமூக நலத்துறையின் கீழ் சிறுவர் சீர்திருத்தப் பள்ளி ஒன்று இயங்கி வருகிறது. 18 வயதுக்குள் குற்றச் செயல்களில் ஈடுபடும் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த சிறுவர், சிறுமியர்  இங்கு அடைக்கப்பட்டு உள்ளனர். இங்கு சுமார் 200 பேர் வரை தண்டனை அனுபவித்து வருகின்றனர்.

இந்நிலையில் நேற்று இரவு சுமார் 12 மணியளவில் வார்டன்கள் ராஜேந்திரன் மற்றும் ஏழுமலை ரோந்து சென்றபோது மதுரையை சேர்ந்த யாசின் முகமது, பரமேஸ்வரன், முனியப்பன், அஜித்குமார் ஆகிய 4 சிறுவர்கள் டியூப் லைட் மூலம் வார்டன்களை காயபடுத்திவிட்டு வார்டன் ஒருவரிடம் இருந்து சாவியை பறித்து கொண்டு மெயின் கதவை திறந்து தப்பியோடிவிட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த வார்டன்கள், அவர்களை விரட்டி பிடிக்க முயற்சி செய்தும் முடிய வில்லை. இந்த பரபரப்பான சந்தர்ப்பத்தை பயன்படுத்தி கொண்ட அருண்குமார், லாரன்ஸ், விஜய், சதீஷ், பிரேம், சுரேஷ்குமார் ஆகிய 6 பேர்களும் சுவர் ஏறி தப்பி சென்றுவிட்டனர்.

இது குறித்து உடனடியாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கபட்டது. இதையடுத்து, தப்பி சென்ற 10 சிறுவர்களையும் போலீசார் தீவிரமாக தேடி வருகின்றனர். தப்பி ஓடியவர்களில் அஜித்குமார் மீது மதுரையில் ஒரு கொலை வழக்கும், யாசின் முகமது, பரமேஸ்வரன் உள்பட மற்ற 9 பேர் மீதும் திருட்டு வழக்குகள் உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply