உலகின் குட்டி பேரழகி, பேரழகனாக உக்ரைன் நாட்டு சிறுமி, சிறுவன் தேர்வு.

[carousel ids=”64457,64458,64460,64461,64463,64464″]

உலகின் குட்டிப் பேரழகியாக உக்ரைன் நாட்டை சேர்ந்த 10 வயது சிறுமி ஒருவர் தேர்வு செய்யப்பட்டுள்ளார். அவருக்கு உலகம் முழுவதிலும் இருந்து வாழ்த்துக்கள் குவிந்து வருகின்றது.

ரஷ்யாவின் புகழ்மிக்க சமூக வலைத்தளமான ‘விகொண்ட்டாக்டே என்ற இணையதளம் உலகின் குட்டிப்பேரழகியை தேர்வு செய்ய கடந்த 10 நாட்களாக ஆன்லைன் மூலம் வாக்கெடுப்பை நடத்தியது. ஒழுக்கம், பாரம்பரிய உடை மற்றும் நவநாகரிக உடை அணியும் நேர்த்தி, அறிவுத்திறன் ஆகியவற்றின் அடிப்படையில் இந்த போட்டியில் பல்வேறு நாடுகளை சேர்ந்தவர்கள் போட்டியிட்டனர்.  இந்தப் போட்டியில் உக்ரைன் நாட்டை சேர்ந்த அன்னா கிலிமோவெட்ஸ், முதலிடத்தை பெற்று வெற்றி பெற்றுள்ளார்.

இதேபோல், உலகின் குட்டி பேரழகன் பட்டத்தை அர்சேனி மகேகா என்ற சிறுவன் தட்டிச்சென்றுள்ளான். இந்த சிறுவனும் உக்ரைன் நாட்டை சேர்ந்த சிறுவன் என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply