இனி தேனாம்பேட்டை சிக்னல் பிரச்சனை இருக்காது: அமைச்சரின் அதிரடி அறிவிப்பு
சென்னையில் தேனாம்பேட்டை சிக்னல் வாகன ஓட்டிகளுக்கு பெரும் பிரச்சனையாக இருந்து வரும் நிலையில் இனி அந்த பிரச்சினை இருக்காது என தெரிகிறது
சென்னை தேனாம்பேட்டையில் இருந்து சைதாப்பேட்டை வரை 5 சிக்னல்கள் உள்ளன
இந்த சிக்னல்களை கடந்து செல்ல குறைந்தது அரை மணி நேரம் ஆகும்
இந்த நிலையில் சென்னை தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை உயர்மட்ட சாலை அமைக்கப்படும் என்றும் இதற்காக 480 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டு உள்ளதாகவும் அமைச்சர் எ.வ.வேலு தெரிவித்துள்ளார்