துருக்கி புரட்சியான காரணமாக தீவிரவாத அமைப்பு இந்தியாவுக்கு ஊடுருவலா?
சமீபத்தில் துருக்கி நாட்டில் ஏற்பட்ட புரட்சியால் பெரும் பரபரப்பு ஏற்பட்ட நிலையில் புரட்சியாளர்களை மக்களின் துணையுடன் அந்நாட்டின் அதிபர் முறியடித்தார். ராணுவத்தின் ஒரு பிரிவினர் ஏற்படுத்திய இந்த புரட்சிக்கு மெரிக்காவில் வாழும் மதகுரு பெதுல்லா குலன் தலைமையிலான தீவிரவாத அமைப்புதான் காரணம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் இதே அமைப்பு தற்போது இந்தியாவிலும் ஊடுருவி இருப்பதாக அதிர்ச்சி தகவல் ஒன்று வெளிவந்துள்ளது.
இது குறித்து துருக்கி வெளியுறவுத் துறை மந்திரி மெவ்லட் காவுசோக்லு, தலைநகர் புதுடெல்லியில் சுஷ்மா சுவராஜ் உடன் கலந்து பேசிய பிறகு செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
’FETO’ என்ற பெதுல்லா குலன் பயங்கரவாத அமைப்பு ரகசியமாக நாடு கடந்த குற்றவியல் நடவடிக்கையை உலகம் முழுவதும் செய்து வருகிறது. துரதிருஷ்டவசமாக இந்த அமைப்பு இந்தியாவில் உள்ள நிறுவனங்கள் மற்றும் பள்ளிகளில் ஊடுருவி உள்ளது. இந்தியா அதற்கு தக்கவாறு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று இந்திய அரசை கேட்டுக் கொள்கிறேன் என்று தெரிவித்தார்.
இது குறித்து இந்திய வெளியுறவுத் துறை அமைச்சகத்தின் செய்தி தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறியப்போது, ‘துருக்கி நாட்டின் கவலை குறித்து மத்திய அரசு கவனத்தில் கொண்டு பாதுகாப்பு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும்” என்றார்.