சுவீடன் சூப்பர் மார்க்கெட்டில் தீவிரவாதிகள் தாக்குதல். 3 பேர் பலி
சமீபத்தில் சிரியாவில் தீவிரவாதிகள் நடத்திய ரசாயன தாக்குதல் காரணமாக குழந்தைகள் உள்பட நூற்றுக்கணக்கானோர் பலியான நிலையில் நேற்று சுவீடன் நாட்டில் தீவிரவாதிகள் நடத்திய டிரக் தாக்குதலில் சம்பவ இடத்திலேயே 3 பேர் பலியாகியுள்ளனர். மேலும் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் பலர் சிகிச்சை பெற்று வருவதாகவும் அவர்களில் சிலர் உயிருக்கு போராடி வருவதால் உயிர்ப்பலி அதிகரிக்கும் என அஞ்சப்படுவதாகவும் சுவீடன் ஊடகங்கள் செய்த் வெளியிட்டுள்ளன.
சுவீடன் தலைநகர் ஸ்டாக்ஹோம் பகுதியில் உள்ள பரபரப்பான சூப்பர் மார்க்கெட்டில் நேற்று இரவு மர்ம நபர் ஒருவர் டிரக் ஒன்றை மிக வேகமாக ஓட்டிவந்து மோதியுள்ளார். இதனால் டிரக்கில் இருந்த வெடிகுண்டுகள் பயங்கரமாக வெடித்து சிதறியதில் சூப்பர் மார்க்கெட்டில் இருந்த் 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்
இந்த குண்டுவெடிப்பு காரணமாக சூப்பர் மார்க்கெட்டில் இருந்த பொதுமக்கள் முண்டியடித்து வெளியே ஓட முற்பட்டதால் ஏற்பட்ட இடிபாடுகளில் சிக்கி பலர் காயம் அடைந்துள்ளனர். இந்த தாக்குதல் சுவீடனில் நிகழ்ந்த முதல் பெரிய தாக்குதலாக கருதப்படுகிறாது. இந்த தாக்குதலை வன்மையாகக் கண்டிக்கிறோம் என்றும் அந்நாட்டின் பிரதமர் லோஃப்வன் கூறியுள்ளார். இந்த தாக்குதலுக்கு இந்திய பிரதமர் மோடி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.