சரமாரியாக சுட்டதில் 11 கர்ப்பிணிகள் பலி
ஆப்கான் தலைநகர் காபூல் என்ற பகுதியில் உள்ள பிரசவ அரசு மருத்துவமனை ஒன்றில் திடீரென போலீஸ் உடையில் துப்பாக்கியுடன் நுழைந்த தீவிரவாதிகள் கண்மூடித்தனமாக துப்பாக்கிச் சூடு நடத்தினார்கள்
இதனை அடுத்து அந்த மருத்துவமனையில் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டு இருந்த 11 தாய்மார்களும் கடந்த சில நாட்களுக்கு முன்னர் பிறந்த இரண்டு சிசுக்களும் கொல்லப்பட்டனர். இதுபோக செவிலியர் சிலரும் கொல்லப்பட்டதாக ஆப்கானிஸ்தான் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன
இந்த கொரோனா வைரஸ் காலத்திலும் தீவிரவாதிகள் தங்களுடைய தாக்குதலை தீவிரப்படுத்தி இருப்பது அனைவரையும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இந்த தாக்குதலுக்கு ஆப்கானிஸ்தான் தலைவர்களும் உலக தலைவர்களும் கண்டனம் தெரிவித்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது
இதுவரை இந்த தாக்குதலுக்கு எந்த அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை என்பதும் அதிர்ச்சியான தகவலாக உள்ளது