ஜம்மு காஷ்மீரில் இன்று தீவிரவாதிகள் ராணுவ உடையில் வந்து தாக்குதல் நடத்தியதில் 4 வீரர்கள் கொல்லப்பட்டனர்.
ஜம்முவில் கதுவா பகுதியில் ஹிரா நகரில் போலீஸ் நிலையம் உள்ளது. இன்று காலை 6.45 மணிக்கு அந்த போலீஸ் நிலையத்தில் 10க்கும் மேற்பட்ட போலலீசார் பாதுகாப்பு பணியில் இருந்தனர். அப்போது ராணுவ சீருடை அணிந்த 4 பேர் ஆட்டோவில் வந்து இறங்கினர். தாங்கள் வைத்திருந்த எந்திர துப்பாக்கியால் சரமாரியாக சுட்டனர். இதில் போலீசார் நிலைகுலைந்து போனார்கள். உடனடியாக அவர்களால் எதிர் தாக்குதல் நடத்த முடியவில்லை.
தொடர்ந்து அதிகமாக பாதுகாப்பு படை வீரர்கள் வரவழைக்கப்பட்டனர். தொடர்ந்து ராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலில் 2 தீவிரவாதிகள் கொல்லப்பட்டனர். மீதமுள்ள 2 தீவிரவாதிகளை ராணுவ ஹெலிகாப்டர் மூலம் தேடிக்கொண்டு இருக்கின்றனர். இந்த சண்டையில் மொத்தம் இதுவரை 6 பேர் பலியாகி உள்ளார். இதில் 2 ராணுவ உயர் அதிகாரிகள்.
மத்திய உள்துறை அதிகாரிகள் மேற்கொண்ட விசாரணையில் 4 பேரும் லஷ்கர் இ தொய்பா சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்ததுள்ளது. இந்திய& பாகிஸ்தான் இடைய பேச்சுவார்த்தை நடக்கவுள்ள நிலையில் அதனை சீர் குலைக்கும் வண்ணம் இவர்கள் இது போன்ற தாக்குதலில் ஈடுபடுவது அன்றாட நிகழ்வாகிவிட்டது.