டொனால்ட் டிரம்ப் வெற்றிக்கு ஐ.எஸ்.தீவிரவாதிகள் பாராட்டு.
அமெரிக்க அதிபர் தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்றதற்கு ஐ.எஸ். மற்றும் அல்-கொய்தா தீவிரவாத இயக்கங்கள் பாராட்டு தெரிவித்துள்ள அதே நேரத்தில் அமெரிக்காவின் இருண்ட நேரம் தொடங்கிவிட்டது என்று கருத்து தெரிவித்துள்ளன
மத்திய கிழக்கு நாடுகளில் உள்ள தீவிரவாத இயக்கங்கள் டிரம்ப் வெற்றியை கொண்டாடி வருவதாகவும், இதுகுறித்து அந்த இயக்கங்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் மகிழ்ச்சியை பதிவு செய்து வருவதாகவும் மேற்கத்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டு உள்ளது.
அமெரிக்காவின் இரட்டை கோபுரங்களை தகர்த்த அல்-கொய்தா தீவிரவாத இயக்கம் வெளியிட்டு உள்ள அறிக்கை ஒன்றில், ‘அமெரிக்காவில் 9-11-ல் அல்-கொய்தாவினால் அமெரிக்காவிற்கு பேரழிவு ஏற்பட்டது, இப்போது அமெரிக்க மக்களின் கையாலே அமெரிக்கா ஒரு பேரழிவை ஏற்படுத்தி உள்ளது என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது
டிரம்ப்பின் செயல்பாடுகள் தீவிரவாதிகளை ஒன்று சேர்க்கும் என்று எச்சரிக்கை விடுத்து உள்ள பயங்கரவாதிகள், டொனால்டு டிரம்ப் வரட்டும், நாங்கள் தயார் என்று பயங்கரவாதிகள் எச்சரிக்கையும் விடுத்து உள்ளனர் என்று செய்திகள் கூறுகின்றன