TET தேர்வில் தேர்ச்சி இல்லையா? அப்ப வீட்டுக்கு போங்க: சென்னை உயர்நீதிமன்றம்
ஆசிரியர் தகுதித் தேர்வான TNTET தேர்வில் தேர்ச்சி பெறாதவர்கள் ஆசிரியர் பணியில் நீடிக்க தகுதி இல்லை என சென்னை உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
12 ஆண்டுகள் கடந்தும் தகுதி பெறாத ஆசிரியர்களுக்கு ஊதிய உயர்வு பெறவும் உரிமை இல்லை என்றும் சென்னை ஐகோர்ட் தெரிவித்துள்ளது.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் அரசு கொண்டு வந்த ஆசிரியர் தகுதித் தேர்வில் அனைத்து ஆசிரியர்களும் தேர்ச்சி பெற வேண்டும் என்று உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது தெரிந்ததே.