$700,000 மதிப்புள்ள பங்களாவை உரிமையாளரே தீ வைத்து கொளுத்திய பரிதாபம்.

[carousel ids=”35588,35589,35590,35591,35592,35593,35594,35595,35596,35597″]

இங்கிலாந்தில் ஏரிக்கரையோரம் இருந்த ஒரு அழகிய பங்களா எந்த நேரமும் இடிந்து விழும் அபாயத்தில் இருந்ததால் அந்த வீட்டின் உரிமையாளரே தனது விட்டை தீ வைத்து கொளுத்திவிட்டார். இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

இங்கிலாந்து நாட்டின் விட்னி என்ற ஏரிக்கரையில் இருந்த அழகிய பங்களா, சுமார் 4000 சதுர அடி பரப்பளவை கொண்டது. இந்நிலையில் ஏரியின் கரை கொஞ்சம் கொஞ்சமாக உடைந்து பங்களாவின் மிக அருகே வந்துவிட்டது. ஒரு கட்டத்தில் அந்த கட்டிடத்தின் பாதி ஏரியின் ஓரத்தில் அந்தரத்தில் தொங்கிக்கொண்டு இருந்ததால், அந்த பங்களாவின்  உரிமையாளர் காலி செய்துவிட்டார்.

நேற்று மீண்டும் வந்த பார்வையிட்ட அவர், தனது பங்களா இன்னும் சில நாட்களில் இடிந்து ஏரியில் விழுந்துவிடும் என்பதை அறிந்து அவரே அந்த பங்களாவிற்கு தீ வைத்துவிட்டார். தீயணைப்பு படையினர்களுக்கு தகவல் தெரிந்து அவர்கள் வருவதற்கு முன்பே பங்களா முற்றிலும் எரிந்து சாம்பலானது. இந்த பங்களாவின் மதிப்பு சுமர் 700,000 அமெரிக்க டாலர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்களா எரிந்து கொஞ்சம் கொஞ்சமாக எரிந்து விழுவதை இங்கிலாந்தின் மிகப்பிரபலமான புகைப்படக்கலைஞர் ஒருவர் எடுத்து புகைப்படங்களை இங்கே காணலாம்.

Leave a Reply