அமெரிக்காவின், டெக்சாஸ் மாகாண வெளியுறவு அமைச்சராக,இந்தியரான நந்திதா பெர்ரி நியமிக்கப்பட்டு உள்ளார்.
நந்திதா பெர்ரி பெங்களூருவில், பட்டபடிப்பை முடித்த பின், அமெரிக்கா சென்று, ஹூஸ்டன் பல்கலை கழகத்தில், சட்ட படிப்பை தொடர்ந்தார். வழக்கறிஞரான பின், டெக்சாஸ் மாகாணத்தின், வெளியுறவுத் துறையில், சட்டம் தொடர்பான பணிகளை சிறப்பாக செய்தார். டெக்சாஸ் மாகாண முதல்வர், ரிக்கி பெர்ரியின் ஆதரவு பெற்ற நந்திதா, தற்போது, அம்மாகாண வெளியுறவு அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அடுத்த மாதம், 7ம் தேதி முதல், டெக்சாஸ் மாகாண தலைமை தேர்தல் அதிகாரியாகவும், அவர் பொறுப்பு வகிக்க உள்ளார்.