என்னென்ன தேவை?
எலும்பில்லாத சிக்கன்-20துண்டுகள்
இஞ்சி விழுது- 1தேக்கரண்டி
பூண்டு விழுது-1/2தேக்கரண்டி
மிளகுத் தூள்-1 தேக்கரண்டி
நல்லெண்ணெய்-2தேக்கரண்டி
சிவப்பு மிளகாய் பொடி-1/2தேக்கரண்டி
தாய்லாந்து சில்லி சாஸ்-4மேசைக்கரண்டி
சோயா சாஸ்-2மேசைக்கரண்டி
உப்பு-தேவைகேற்ப
எப்படி செய்வது?
சிக்கனுடன் சிறிது எண்ணெய் உப்பு மிளகுத்தூள் சேர்த்து கலந்து அரைமணி நேரம் ஊறவைக்கவும். ஒரு சிறிய பாத்திரத்தில் இஞ்சி,பூண்டு சிவப்பு மிளகாய் பொடி, சோயாசாஸ், சில்லிசாஸ், நல்லெண்ணெய் ஆகியவர்ரைச் சேர்த்து நன்கு கலக்கி எடுத்து வைத்துக்கொள்ளவும். ஊறிய சிக்கனை கிரில்லரில் அடுக்கி அரை வேக்காடாக வேகவிடவும். பின்பு தயாரித்து வைத்துள்ள சாஸ் கலவையை சிக்கனின் நாலாபுறமும் படும்படி பூசி தொடர்ந்து கிரில்லரில் வேகவிடவும். இரண்டு புறமும் திருப்பிவிட்டு சாஸைப் பூசவும். நன்கு வெந்ததும் சிக்கனின் மேல் புறம் மொறுமொறுப்பாக ஆகும் வரை கிரில் செய்து எடுத்து பரிமாறவும். – See more at: http://www.dinakaran.com/Cooking_Detail.asp?Nid=1786&Cat=502#sthash.FoN9yTcG.dpuf