ஃபேஸ்புக்கில் வெளியான படத்தை லைக் செய்த இளைஞருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை
ஃபேஸ்புக்கில் வெளியான படம் ஒன்றை லைக் செய்து தனது நண்பர்களுக்கும் ஷேர் செய்த தாய்லாந்து நாட்டை சேர்ந்த ஒருவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
தாய்லாந்து மன்னர் Bhumibol Adulyadej என்பவருக்கு ஃபேஸ்புக்கில் அக்கவுண்டே கிடையாது. இவரது புகைப்படம் ஒன்று மார்பிங் செய்யப்பட்டு ஃபேஸ்புக்கில் மர்ம மனிதர் ஒருவர் பதிவு செய்துள்ளார். இந்த பதிவிற்கு தாய்லாந்தை சேர்ந்த Thanakorn Siripaiboon என்ற மெக்கானிக் லைக் செய்ததோடு தனது 608 நண்பர்களுக்கு ஷேர் செய்துள்ளார்.
இவர் மீது அதிரடி நடவடிக்கை எடுத்துள்ள தாய்லாந்து அரசு இவருக்கு 32 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளதாக தாய்லாந்து ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. ஜெயில் தண்டனை பெற்ற இவருக்கு உதவ, தாய்லாந்தின் எந்த வழக்கறிஞர்களும் முன்வரவில்லை என்று கூறப்படுகிறது.
English Summary: If a doctored image mocking Thailand’s king crops up on your Facebook timeline, liking it can be very costly. Thai man faces up to 32 years behind bars after he hit ‘like’ on a Photoshopped picture of King Bhumibol Adulyadej. Thanakorn Siripaiboon, a 27-year-old mechanic, is also accused of sharing an infographic on a corruption scandal. Anyone convicted in Thailand of insulting the king, now 88, faces up to 15 years in jail for each count.