மூன்று நாள் டாய்லெட் போக $40,000 செலவா? அதிர்ச்சியில் கம்போடியா மக்கள்
இந்தியா உள்பட பல நாடுகளில் இன்னும் அடிப்படை வசதியான டாய்லெட் பல வீடுகளில் இல்லாத நிலை இருக்கும்போது தாய்லாந்து நாட்டு இளவரசிக்காக $40,000 செலவில் அதிநவீன டாய்லெட் ஒன்று கட்டப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
தாய்லாந்து நாட்டு இளவரசி தனது பக்கத்து நாடான கம்போடியாவுக்கு மூன்று நாள் பயணம் செய்யவுள்ளார். இளவரசிக்காக அதிநவீன டாய்லெட்டை கம்போடியா அரசு ஏற்பாடு செய்துள்ளதாம். இந்த டாய்லெட் கட்ட $40,000 செலவாகியுள்ளதாக கம்போடிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கம்போடியாவில் உள்ள ஏரி ஒன்றின் அருகே குளிர்சாதனவசதியுடன் கட்டப்பட்ட கட்டிடம் ஒன்றில்தான் இந்த அதிநவீன டாய்லெட் அமைக்கப்பட்டுள்ளது. இதற்காக அரசு செலவு செய்ததா? அல்லது தனிநபர் செலவு செய்தார்களா? என்பது குறித்த தகவல் தெளிவாக தெரியவில்லை.
மேலும் இளவரசி தனது சபயணத்தை முடித்துவிட்டு நாடு திரும்பியவுடன் இந்த கழிப்பறை அகற்றப்பட்டு, இந்த கட்டிடம் ஒரு அரசு அலுவலகமாக இயங்கும் என்று கூறப்படுகிறது
இன்னும் பல மில்லியன் கம்போடியா மக்களுக்கு சுத்தமான குடிநீர் மற்றும் அடிப்படை சுகாதார வசதிகள் இல்லாத நிலையில் இளவரசியின் மூன்று நாள் பயணத்திற்காக $40,000 செலவு செய்தது அந்நாட்டு மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.