ஒரே நாளில் 15 இடங்களில் குண்டுவெடிப்பு. தாய்லாந்தில் பதட்டம்

 ஒரே நாளில் 15 இடங்களில் குண்டுவெடிப்பு. தாய்லாந்தில் பதட்டம்

தாய்லாந்து நாட்டில் நேற்று ஒரே நாளில் அடுத்தடுத்து 15 இடங்களில் வெடிகுண்டு தாக்குதல் நடத்தப்பட்டதால் நாடு முழுவதும் பெரும் பதட்ட நிலை ஏற்பட்டுள்ளது.. இந்த தாக்குதலில் 8 பேர் படுகாயமடைந்துள்ளதாக முதல்கட்ட தகவல் கிடைத்துள்ளது

தாய்லாந்து நாட்டின் எல்லை பகுதியான மலாய் படானி மண்டலத்திற்குட்பட்ட நராதிவாட் மற்றும் சாங்லா மாகாணத்தின் படானி பகுதியில் நேற்று இரவு சுமார் 7.30 மணி முதல் 8.30 மணியளவில் இந்த வெடிகுண்டு தாக்குதல் நிகழ்ந்துள்ளதாக போலீசார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் குறிப்பிட்டுள்ளனர்.

இதில் ராணுவத்திற்கு சொந்தமான இடம், காவல் நிலையம் மற்றம் குடியிறுப்புப் பகுதிகளில் இந்த குண்டுவெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்துள்ளது. மேலும் எல்லையில் அத்துமீறிய மர்ம நபர்கள் பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச்சூடு நடத்தியதாகவும் கூறப்படுகிறது.

கடந்த 2004 முதல் தாய்லாந்தில் முஸ்லீம்கள் அதிகளவில் வாழும் தெற்கு பகுதியில் புத்த மதத்தினரின் ஆட்சி நடந்து வருகிறது. எனவே பிரிவிணையை வலியுறுத்தி 2004-ஆம் ஆண்டு முதல் அங்கு போராட்டங்கள் நடைபெற்று வருகிறது. இந்த போராட்டங்களில் இதுவரை சுமார் 6,500 பேர் உயிரிழந்துள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தாக்குதலுக்கு எந்தவித அமைப்புகளும் இதுவரை பொறுப்பேற்கவில்லை.

Leave a Reply