தாய்லாந்து நாட்டில் ஊழலில் ஈடுபட்டதாக அந்நாட்டின் பிரதமர் யிங்லக் ஷினவத்ரா பதவி பறிக்கப்பட்டதை அடுத்து புதிய பிரதமரை நியமனம் செய்ய கோரி பொதுமக்கள் கிளர்ச்சியில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் கிளர்ச்சியை கட்டுப்படுத்த தாய்நாலந்தில் ராணுவ ஆட்சி சில நாட்களுக்கு முன்னர் அமல்படுத்தப்பட்டது.
இந்நிலையில், தாய்லாந்து நாட்டிற்கு புதிய பிரதமராக இராணுவப் புரட்சிக்கு தலைமை வகித்த ஜெனரல் பிரயூத் சன்- ஒச்சா அவர்களை அந்நாட்டின் பாராளுமன்ற குழு தேர்வு செய்துள்ளது. இதற்கான வாக்குப்பதிவு நேற்று தாய்லாந்து பாராளுமன்றத்தில் நடந்தது. இந்த வாக்குப்பதிவில் 197 உறுப்பினர்கள் வாக்களித்தனர்.
வாக்குப்பதிவிற்கு பின்னர் பிரயூத் சன்- ஒச்சா வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டதால் அவர் தாய்லாந்து பிரதமராக முறைப்படி நேற்று இரவு அறிவிக்கப்பட்டார். வாக்குப்பதிவில் வெற்றி பெற்றாலும், அவர் ம்பிரதாய முறைப்படி, அந்நாட்டு அரசர் பூமிபோல் அதுல்யாதெஜ்ஜிடம் இருந்து ஒப்புதல் பெற வேண்டும். விரைவில் அரசர் ஒப்புதல் வழங்கிவிடுவார் என்று தாய்லாந்து ஊடகங்கள் தெரிவித்துள்ளது.