ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசம்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

ஜனவரி 31ஆம் தேதி தைப்பூசம்: திண்டுக்கல் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை

தமிழ்க்கடவுள் முருகனுக்கு உகந்த நாளான தைப்பூசம் திருவிழா முருகனின் அறுபடை வீடுகளிலும் சிறப்பாக கொண்டாடப்படும் குறிப்பாக திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள பழநியில் லட்சக்கணக்கான முருகபக்தர்கள் முருகனை வழிபடுவார்கள்

இந்த நிலையில் இந்த ஆண்டு வரும் 31ஆம் தேதி தைப்பூச திருவிழா நடைபெறவுள்ளதை அடுத்து திண்டுக்கல் மாவட்டத்துக்கு ஜனவரி 31ம் தேதி உள்ளூர் விடுமுறை என அம்மாவட்ட கலெக்டர் வினய் உத்தரவிட்டுள்ளார். இதன்படி திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் தனியார் பள்ளிகளும், கல்லூரிகளும் அன்றைய தினம் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதற்கு பதிலாக பிப்ரவரி 10ம் தேதி சனிக்கிழமை வேலை நாளாக அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply