ரஜினி சிகிச்சை பெற்ற சென்னை மருத்துவமனையில் அஜீத்?
அஜீத் நடித்து வரும் ‘தல 56’ படத்தின் படப்பிடிப்பு சென்னை, கொல்கத்தா மற்றும் வெளிநாடுகளில் முடிவடைந்த நிலையில் மீண்டும் சென்னையில் தற்போது நடைபெற்று வருகிறது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை ராமி மாலில் இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வந்த நிலையில் இன்று சென்னை அடையாறு பகுதியில் உள்ள பிரபல மருத்துவமனை ஒன்றில் சண்டைக்காட்சி ஒன்றில் படப்பிடிப்பு நடைபெற்று வருவதாக செய்திகள் வெளிவந்துள்ளது.
இந்த தகவலை இந்த படத்தில் இரண்டு வில்லன்களில் ஒருவராக நடித்து வரும் ராகுல் தேவ், தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். இந்த மருத்துவமனையில் அஜீத் மற்றும் ராகுல்தேவ் மோதும் சண்டைக்காட்சியின் படப்பிடிப்பு நடந்து வருவதாக படக்குழுவினர் தெரிவித்துள்ளனர். இந்த மருத்துவமனையில்தான் ரஜினிகாந்த் உள்பட பல பிரபலங்கள் சிகிச்சை பெற்று வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
அஜீத் ஜோடியாக ஸ்ருதிஹாசனும், தங்கையாக லட்சுமி மேனனும் நடித்து வரும் இந்த படத்தை சிறுத்தை சிவா இயக்கி வருகிறார். ஏ.எம்.ரத்னம் தயாரித்து வரும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைக்கின்றார். இந்த படம் வரும் தீபாவளி தினத்தில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.