திருச்செங்காட்டங்குடி தலம் நாகை காயிதே மில்லத் மாவட்டம் நன்னிலம் வட்டத்தில் உள்ளது இத்திருக்கோயில்.
இறைவன் பெயர் :
அருள்மிகு கணபதீச்சரம்
இறைவி பெயர் :
அருள்மிகு வாய்த்த திருகுழல் உமை நங்கை.
தலப் பெருமைகள்:
இத்திருக்கோயில் மிகத் தொன்மையானது. முதலாம் இராசராசன் காலத்து கல்வெட்டுகள் இருப்பதே இதன் தொன்மைக்கு சான்று. சமயக்குறவர்கள் திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர் ஆகியோரால் வழிபாடப் பெற்று அவர்கள் அருளிய மூன்று பதிகங்கள் உள்ளன. திருஞானசம்பந்தர் திருமருகலையும், இத்தலத்தையும் இணைத்து ஒரு பதிகம் அருளியுள்ளார். இவற்றிலிருந்து இத்திருக்கோயில் கி.பி. 6 அல்லது 7ஆம் நூற்றாண்டிற்கு முன்பிருந்தே வழிபடப் பெற்றமை என்பது அறியப்படும்.