ஜிஎஸ்டியை கொண்டு வந்ததே காங்கிரஸ்-திமுகதான். மு.க.ஸ்டாலினுக்கு தம்பிதுரை பதிலடி
இந்தியாவில் பல வருடங்கள் முயற்சிக்கு பின்னர் ஜிஎஸ்டி வரிமுறை நாளை முதல் நாடு முழுவதும் அமலுக்கு வருகிறது. இந்த நிலையில் இன்று நள்ளிரவு நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி அறிமுக விழா நடைபெறவுள்ளது. இந்த விழாவை காங்கிரஸ், திரிணாமூல் காங்கிரஸ், மார்க்சிஸ்ட், திமுக ஆகிய எதிர்க்கட்சிகள் புறக்கணிக்கப்போவதாக அறிவித்துள்ளது.
மேலும் எந்தவித முன்னேற்பாடும் இல்லாமல் ஜி.எஸ்.டி.யை அமல்படுத்துவதால் ஏற்படும் பாதிப்புகளுக்கு தமிழக அரசுதான் பொறுப்பேற்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.
இதுகுறித்து ஸ்டாலினுக்கு பதிலளித்த மக்களவை துணை சபாநாயகரும், அதிமுக மூத்த தலைவருமான தம்பிதுரை, நாடாளுமன்றத்தில் ஜி.எஸ்.டி. மசோதாவை கொண்டு வந்ததே திமுக, காங்கிரஸ் தான் என்றும் ஆனால் இப்போது அந்த கட்சிகளே ஜிஎஸ்டியை எதிர்ப்பது வேடிக்கையாக உள்ளதாகவும் கூறினார். மேலும், ஜெயலலிதாவின் கோரிக்கைகளை ஏற்று சில திருத்தங்களை செய்ததால் ஜிஎஸ்டியை ஆதரித்தோம் என்று தெரிவித்தார்.