திமுக-பாஜக நெருக்கத்தால் அதிமுகவுக்கு கவலையா? தம்பிதுரை பதில்

திமுக-பாஜக நெருக்கத்தால் அதிமுகவுக்கு கவலையா? தம்பிதுரை பதில்

வரும் பாராளுமன்ற தேர்தலில் திமுகவுடன் பாஜக கூட்டணி வைக்கும் என்று கூறப்பட்டு வருகிறது. இந்த நிலையில் அதிமுக தனித்துவிடப்படுமா? என்ற கேள்வியும் எழுந்துள்ளது

இதுகுறித்த செய்தியாளர்களின் கேள்வி ஒன்றுக்கு பதிலளித்த அதிமுக எம்பி தம்பிதுரை, ‘பாஜகவும் திமுகவும் நெருங்குவதால் அதிமுகவுக்கு கவலையில்லை. கடந்த தேர்தல் போலவே அதிமுக தனித்து தேர்தலை சந்திக்கும் அளவுக்கு வலுவுடன் உள்ளது என்று கூறினார்.

மேலும் சென்னையில் 30 ஆம் தேதி நடைபெறும் மறைந்த திமுக தலைவர் கருணாநிதியின் நினைவேந்தல் கூட்டத்தில் அமித்ஷா பங்கேற்பதினால் இரு கட்சிகளுக்கும் இடையே கூட்டணி ஏற்படும் என தான் கருதவில்லை என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply