சசிகலாவை சிறையில் சந்திக்க செலவு செய்வதற்கா வரி கட்டுகிறோம்! சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

சசிகலாவை சிறையில் சந்திக்க செலவு செய்வதற்கா வரி கட்டுகிறோம்! சமூக ஆர்வலர்கள் ஆதங்கம்

பொதுமக்கள் செலுத்தும் வரிப்பணத்தில் தான் எம்பிக்கள், எம்.எல்.ஏக்கள் பயணப்படி, சம்பளம் உள்பட பல சலுகைகளை பெற்று வருகின்றனர். இந்த சிலையில் தங்களுடைய கட்சி காரணங்களுக்காக சசிகலாவை சந்திக்க பெங்களூர் செல்லும் அதிமுக எம்.எல்.ஏக்கள் பயணப்படியாக லட்சக்கணக்கில் அரசு நிதியை செலவு செய்துள்ளது தகவல் அறியும் உரிமை சட்டத்தின் மூலம் தெரியவந்துள்ளது.

குறிப்பாக ராஜ்யசபா துணை சபாநாயகர் தம்பிதுரை பயணப்படியாக ஜனவரி 2016 முதல் மார்ச் 20, 2017 வரை 51 லட்சத்து 90 ஆயிரத்து 655 ரூபாய் பெற்றுள்ளார். இதில் பல முறை பெங்களூரு சென்று சசிகலாவை சந்திப்பதற்காகவே பெற்றுள்ளார்.

துணை சபாநாயகர் ஒருவருக்கு டெல்லி, சொந்த ஊர், தொகுதிக்கு செல்லுதல், பணி நிமித்தமாக வெவ்வேறு இடங்களுக்கு செல்லுதல் போன்றவற்றுக்கு மட்டுமே பயணப்படியை பயன்படுத்த முடியும் என்ற நிலையில் அவர் பெங்களூருக்கு அதுவும் அவரது கட்சி நிமித்தம் சென்றதற்கு பயணப்படி வாங்கியது சரியல்ல என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

பொதுமக்கள் தரும் வரிப்பணத்தை தமிழக அமைச்சர்கள், எம்.எல்.ஏ.,க்கள் சென்னையிலிருந்து பெங்களூரு சிறையில் அடைக்கப்பட்டுள்ள சசிகலாவை சந்திக்க பயணப்படியிலிருந்து பல லட்ச ரூபாய் செலவு செய்து வருவதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

Leave a Reply