ஆளுனருடன் தம்பித்துரை திடீர் சந்திப்பு: தமிழக அரசியலில் பரபரப்பு
கடந்த சில மாதங்களாகவே தமிழகத்தில் அரசியல் ஸ்திரத்தன்மை இன்றி இருப்பதால் எப்போது என்ன நடக்கும் என்று தெரியாமல் உள்ளது. முதல்வர் நாற்காலியின் மேல் தினகரன் என்ற கத்தி தொங்கிக்கொண்டிருப்பதால் ஆட்சியாளர்கள் மக்களின் நலத்திட்டங்களை மறந்து ஆட்சியை தக்க வைப்பதிலேயே தங்கள் முழு கவனத்தையும் செலுத்தி வருவதாக அரசியல் விமர்சகர்கள் கடுமையான விமர்சனத்தை முன்வைத்துள்ளனர்.
இந்த நிலையில் இன்று தமிழக கவர்னர் வித்யாசாகர் ராவை அதிமுக அம்மா அணியை சேர்ந்த தம்பித்துரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நேற்று சென்னை திரும்பிய ஆளுனர் வித்யாசாகர் ராவ் அவர்களை எதிர்க்கட்சி தலைவர் மு.க.ஸ்டாலின் இன்று சந்தித்து நம்பிக்கை வாக்கெடுப்பில் அதிமுக எம்.எல்.ஏகளுக்கு பணம் கொடுக்கப்பட்ட விவகாரத்தில் சிபிஐ விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுட்தினார்.
இந்த நிலையில் நாடாளுமன்ற மக்களவை துணை சபாநாயகரும் , நாடாளுமன்ற உறுப்பினருமான தம்பிதுரை இன்றூ காலை 11 மணியளவில் ஆளுநரை சந்திக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்த சந்திப்பின் போது தமிழக அரசியல் நிலவரம் குறித்து பேசப்படும் என ஏதிர்பார்க்கப்படுகிறது. இதனால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.