தமிழக அமைச்சர் கே.சி.வீரமணிக்கு தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
ஏற்காடு சட்டமன்ற தொகுதிக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியானதை தொடர்ந்து சேலம் மாவட்டம் தேர்தல் விதிகளுக்கு உட்பட்ட பகுதிகளாக உள்ளன. இந்நிலையில், கடந்த 14ம் தேதி சேலம் சென்ற அமைச்சர் வீரமணி, சேலத்தில் உள்ள மருத்துவக் கல்லூரி மருத்துவமனை அதிகாரிகளை சந்தித்துள்ளார். அப்போது விதிமுறைகளை மீறி அதிகாரிகளை சந்தித்தி பிரச்சாரம் செய்தார் என்றும்,தேசிய கொடியுடன் அரசு வாகனத்தை ஏற்காடு தொகுதியில் பயன்படுத்தினார் என்றும் அமைச்சர் வீரமணி மீது உரிய நடவடிக்கை எடுக்கக்கோரி திமுக சார்பில் தேர்தல் ஆணையத்திற்கு புகார் அனுப்பப்பட்டது. இதையடுத்து, அதிகாரிகளை சந்தித்தது மற்றும் அரசு வாகனத்தை பயன்படுத்தியது பற்றி அமைச்சர் வீரமணியிடம் விளக்கம் கேட்டு தேர்தல் ஆணையம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.