காலை, நண்பகல், இரவு என்று வேளைக்கு வேளை வகை வகையான உணவுகளையும் நேரம் கிடைக்கும் போதெல்லாம் கண்ட கண்ட பண்டங்களையும் பணியாரங்களையும் தின்று உடலைக் கெடுத்துக் கொண்டு, வாழ்நாளைக் குறைத்துக் கொள்ளாமல், இயற்கை உணவாகிய நீர் உணவை அருந்தி வந்தால் உடம்பில் நோய் அண்டாது, நீண்ட நாள் வாழலாம்.
காலையில், காலைக் கடன்களை முடித்து பல் துலக்கிய பின்பு காபி, டீ முதல் எந்த உணவையும் உட்கொள்ளக்கூடாது. அதிக அளவு தண்ணீர் குடிக்க வேண்டும். பசி எடுக்கும் போதெல்லாம் தண்ணீரையே குடிக்கவேண்டும். உடம்பிலுள்ள நச்சுத்தன்மைகள் சிறுநீர் மூலம், மலக் குடல் மூலம் வெளியேறிவிடும். தொடக்கக் காலத்தில் எவ்வளவு நேரம் நீர் மட்டுமே அருந்திக் கொண்டு இருக்க முடியுமோ அதுவரை இருக்கவும். அதிகமாகப் பசி எடுக்கும்போது, சாதாரணமான உணவு வகைகளை உட்கொள்ளலாம். சாதாரண உணவு வகைகளை உண்ணும்போது, கொழுப்பு சேர்த்த பொருள்களை நீக்கிவிட வேண்டும். வேண்டிய அளவுக்கு வேகவைத்த காய்கறிகளைக் குறைந்த அளவு உப்பு சேர்த்து உண்ணலாம். சப்பாத்தி, முட்டை கோஸ் சாப்பிடலாம். தொடக்கக் காலத்தில் ஒருவேளை உணவைக் குறைத்துக் கொண்டு நாளொன்றுக்கு இரண்டு வேளை உணவு மட்டும் உட்கொள்ள வேண்டும்.
இவ்வாறு பழகப் பழக நீர் உணவுக்கு ஏற்றாற்போல் உடம்பின் தன்மைகள் மாறிவிடும். அதன்பிறகு இரண்டு வேளை உணவிலிருந்து ஒருவேளை உணவு மட்டுமே உட்கொள்ள வேண்டும். தண்ணீர் குடித்துக் கொண்டே இருக்க வேண்டும். இவ்வாறு, நீர் உணவு முறையை மேற்கொண்டு வந்தால், அவரவர் உடல் எடையைப் பொறுத்து, அதற்கு ஏற்றாற்போல் உடல் எடை குறையும். பின்பு உடல் எடை குறைவது நின்று விடும். எவ்வாறென்றால், அவரவர் உடல் எடையில் எவ்வளவு நச்சுப் பொருள்கள் உள்ளனவோ அவை வெளியேறும் போது உடல் எடை குறையும். நச்சுப்பொருள் இன்றி தூய்மையான உடலைப் பெறுகின்றபோது எடை குறைவது நின்றுவிடும். எடை குறைவது நின்றுவிட்டால், உடல் தூய்மையாகிவிட்டது என்று பொருள். தொடர்ந்து நீர் அருந்திக் கொண்டு வந்தால், உடல் ஒரே மாதிரியாக இருக்கும். எந்த மாற்றமும் ஏற்படாமல் நிலையாக இருக்கும். உடலிலிருந்து நோய்கள் அனைத்து நீங்கிவிடும். உப்புச்சத்து உடலிலிருந்து நீங்கிவிட்டால், கண்பார்வை மேலோங்கிக் கூர்மையாகும், பற்கள் வளமாகும். வியர்வை தோன்றாது. துர்நாற்றம் வீசாது. குளிக்க வேண்டும். பல் துலக்க வேண்டும். மலம் கழிக்க வேண்டும் என்னும் நிலை ஏற்படாது. கழிவுகள் உடம்புக்குள் இல்லையென்றான பின்பு கழிவுகள் வருவது எப்படி? உணவை எத்தனை வேளை உண்கிறோமோ அதற்குத் தகுந்தவாறே நன்மைகள் கிடைக்கும். உணவு உண்பது குறையக்குறைய நன்மைகள் பெருகும். மூன்று வேளை உணவை உண்பவர் நோயாளியாக இருப்பர். இரண்டு வேளை உண்பவர் வாழ்க்கை இன்பத்தை நுகர்ந்து கொண்டிருப்பர்.