காட்டுப்பரூர் ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி மூன்றாவது ஞாயிற்றுக் கிழமையொட்டி சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. மங்கலம்பேட்டை அடுத்த காட்டுப்பரூரில் அமைந்துள்ள பழைமையான சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவிலில் புரட்டாசி ஞாயிற்றுக் கிழமைகளில் சிறப்பு பூஜை நடைபெறுவது வழக்கம். புரட்டாசி மூன்றாவது ஞாயிற்றுகிழமையொட்டி நேற்று முன்தினம், காட்டுப்பரூர் சுயம்பு ஆதிகேசவ பெருமாள் கோவிலில், காலை 5:00 மணியளவில் சிறப்பு அபிஷேக, ஆராதனை நடந்தது. காலை 9:00 சிறப்பு தீபாராதனை நடந்தது. பகல் 12:00 மணிக்கு சிறப்பு அலங்காரத்தில் சுவாமி அருள்பாலித்தார். ஏராளமானோர் சுவாமி தரிசனம் செய்தனர். அதே போல், முகாசபரூர் வரதராஜ பெருமாள் கோவிலில் மூன்றாவது சனிக்கிழமையொட்டி காலை 9:00 மணிக்கு சிறப்பு அபிஷேக ஆராதனை நடந்தது. பகல் 11:00 மணிக்கு தங்க கவசத்தில் சுவாமி அருள்பாலித்தார்.