ஒரே நாளில் சுமர் முப்பது லட்சத்திற்கு மேற்பட்ட மரக்கன்றுகளை நட்டு கின்னஸ் சாதனை செய்திருக்கிறது தஞ்சாவூர் மாவட்ட நிர்வாகம். சமீபத்தில் ஆரம்பிக்கப்பட்ட ‘பசுமை தஞ்சை’ என்கிற திட்டத்தின் கீழ் தஞ்சை மாவட்ட கலெக்டர் சுப்பையன் இந்த மரக்கன்றுகளை நட்டு பசுமை புரட்சி செய்துள்ளார். மரங்கள் குறைந்து போனதால், மழை குறைந்து போன தஞ்சை மாவட்டத்தில் மீண்டும் பழைய வளத்தை திரும்ப கொண்டு வரவேண்டும் என்பதற்காகவே இந்த திட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார்.
ஒரு ஊராட்சிக்கு குறைந்தது ஐந்தாயிரம் மரக்கன்றுகள் வீதம் நடப்பட்டிருப்பதாகவும், குறிப்பாக இந்த மரங்களில் மக்களுக்கு நன்மை பயக்கும் தேக்கு, புன்னை, குமுளி தேக்கு, போன்றவை அதிகளவில் நடப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது. தஞ்சாவூர் மாவட்டம் பட்டுக்கோட்டை அருகிலிருக்கும் பழஞ்சூர் ஊராட்சியில் தொகுதி எம்.எல்.ஏ.வான ரெங்கராஜன், ஊராட்சிமன்ற தலைவர் குணசேகரன் உள்ளிட்டோர் பஞ்சாயத்து அலுவலகத்தில் மரக்கன்றுகளை நட்டனர். காலை பத்து மணிக்கு தொடங்கி இந்த திட்டம் பனிரெண்டு மணிக்கு முடிவடைந்தது.