பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என்ன? 10ஆம் வகுப்பு தேர்வில் கேட்கப்பட்ட கேள்வி.

10thதமிழகத்தை போலவே தற்போது இந்தியாவின் பல மாநிலங்களில் பத்தாம் வகுப்பு தேர்வு நடைபெற்று வருகிறது. இந்நிலையில் ஹரியானா மாநிலத்தில் கடந்த வெள்ளியன்று ‘பாலிடிக்கல் சயன்ஸ்’ பாடத்திற்கான தேர்வு நடைபெற்றது. இந்த தேர்வில் அளிக்கபட்ட கேள்வித்தாளில் இருந்த ஒரு கேள்வியில் பாரதிய ஜனதா கட்சியின் சின்னம் என்ன? என்று கேட்கப்பட்டிருந்து.

மாணவர்களின் மனதில் தங்கள் கட்சியின் சின்னத்தை பதிவு செய்ய வேண்டும் என்ற நோக்கத்திற்காகவே இந்த கேள்வி கேட்கப்பட்டுள்ளதாகவும் ஹரியானா மாநிலத்தில் உள்ள எதிர்க்கட்சிகள் குற்றம் சாட்டியுள்ளன. இதுபோன்ற கேள்விகளை தேர்வு செய்ய அனுமதித்த தேர்வுத்துறை உறுப்பினர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சிகள் வலியுறுத்தி வருவதால் அம்மாநிலத்தில் பெரும் பரபரப்பு ஏற்பட்டு வருகிறது.

இதுபோன்ற கட்சி சார்புள்ள கேள்விகளுக்கு ஹரியானா மட்டுமின்றி வெளிமாநிலத்தில் இருந்தும் எதிர்ப்பு கிளம்பியுள்ளதால் ஹரியானா ஆளுங்கட்சியும், மத்திய அரசும் பெரும் சிக்கலில் தவித்து வருகிறது. இந்த கேள்வித்தாளை தயாரித்த குழுவினர்கள் மீது நடவடிக்கை எடுக்க ஹரியானா அரசு முடிவு செய்திருப்பதாகவும் தகவல்கள் கூறுகின்றன.

Leave a Reply