கூகுள் வேலையை விட்டுவிட்டு சமோசா விற்று ரூ.50 லட்சம் சம்பாதிக்கும் இளைஞர்
கூகுள் நிறுவனத்தின் வேலையை ராஜினாமா செய்த இந்திய இளைஞன் ஒருவர் வருடத்திற்கி 50 லட்சம் சம்பாதிக்கின்றார். அவரின் தைரியத்திற்கும், வெற்றிக்கும் என்ன காரணம் என்பதை தெரிந்துகொள்வோம்.
உலகின் மிகப்பெரிய ஐடி நிறுவனம் கூகுள். இங்கு வேலை கிடைக்குமா என பலரும் காத்துக்கொண்டு இருக்கின்றனர். ஆனால் முனாஃப் கபாடியா என்ற இளைஞன், வேலைப்பார்த்த கூகுள் நிறுவன வேலையை உதறிதள்ளிவிட்டு, சமோசா விற்பனை செய்து வருகின்றார்.
கூகுள் வேலை:
சில வருடங்களுக்கு முன் எம்பிஏ படிப்பை முடித்த முனாஃப், இந்தியாவை விட்டு வெளியேறினார். அடுத்த சில வருடங்களில் கூகுளில் வேலை கிடைத்தது. அங்கு தன் தனித் திறமையால் நல்ல சம்பளம் வாங்கிவந்துள்ளார். இருப்பினும் அதை விட சிறந்த வேலை கிடைக்குமா என தேடிக்கொண்டிருந்த முனாஃப், சொந்த வேலையை தொடங்கும் நோக்கில் கூகுள் வேலையை விடுத்துள்ளார்.
சமோசா வியாபாரம்:
தன் தாய் நஃபிசா டிவியில் வரும் சமையல் நிகழ்ச்சியை பார்த்து சமைக்க அப்படியே சமைப்பதில் மிக ஆர்வமிக்கவர். அதோடு தன் சொந்த முயற்சியில் பல பதார்தங்களை செய்வதில் ஆர்வமாக இருந்தார்.
இவரின் பதார்த்தங்கள் அனைவரும் மெச்சி சாப்பிடும் வண்ணம் இருந்தது. இதையடுத்து, தன் தாயின் சமையலை கற்றுக்கொண்ட முனாஃப் அவரை போலவே சமைக்க ஆரம்பித்தார்.
அதன்பின் ‘தி போரி கிச்சன்’ என்ற உணவகத்தை ஆரம்பித்தார். ஆரம்பித்த ஒரு வருடத்தில் 5 நட்சத்திர ஹோட்டல்களில் இவரின் சமோசா சப்ளை செய்ய ஆர்டர் கொடுத்தனர். அதுமட்டுமல்லாமல், இவரின் கடையில் சமோசா, நர்கீஸ் கபாப், தபா கோஸ்த் உள்ளிட்ட பல உணவுகளை வாங்க வரிசைகட்டி மக்கள் நிற்கின்றனர்.
இந்த ஆண்டு மட்டும் ரூ 50 லட்சம் லாபாம் ஈட்டியுள்ளார். வரும் ஆண்டில் 5 கோடி ரூபாய் லாபம் ஈட்டுவதே என் லட்சியம் என முனாஃப் தெரிவித்துள்ளார்