கல்லாக மாறி வரும் 8 வயது சிறுவன். வங்கதேசத்தில் ஒரு பரிதாபம்

கல்லாக மாறி வரும் 8 வயது சிறுவன். வங்கதேசத்தில் ஒரு பரிதாபம்


கல் மனசு கொண்ட மனிதர்கள் இருப்பார்கள் என்றுதான் நாம் இதுவரை கேள்விப்பட்டிருக்கின்றோம். ஆனால் வங்கதேசத்தில் 8 வயது சிறுவனின் உடல் கொஞ்சம் கொஞ்சமாக கல்லாகி வருகிறதாம்.

பழைய புராணங்களில் தப்பு செய்தால் உடனே ‘நீ கல்லாகி போ’ என்று சபிப்பார்கள். ஆனால் உடலில் ஏற்பட்ட ஒருவித வித்தியாசமான மாற்றத்தால் மெஹந்தி ஹாசன் என்ற 8வயது வங்கதேச சிறுவனின் உடல் கடினமாக மாறி வருகிறதா. கிட்டத்தட்ட கல்போன்று கடுமையாக இருக்கும் இந்த சிறுவனின் மேற்புறத்தோலை கண்டு அக்கம் பக்கத்தினர் அருவருப்புடன் விலகி ஓடுகின்றனர்.

எனவே இந்த சிறுவனின் தாய், தனது மகனை வீட்டை விட்டு வெளியே அனுப்பாமல் வீட்டுக்குள்ளேயே வைத்துள்ளார். இந்நிலையில் தனது மகனுக்கு சிகிச்சை அளிக்க வங்கதேச அரசும், உலகில் உள்ள சமூக நல அமைப்புகளும் உதவி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply