9 மாத குழந்தைக்கு 7 முறை ஹார்ட் அட்டாக். பிரிட்டனின் அபூர்வ குழந்தை.

britain babyபிரிட்டனை சேர்ந்த ஒன்பது மாத குழந்தை ஒன்று ஏழு முறை மாரடைப்பு நோய் ஏற்பட்டு அதிசயமாக உயிர் வாழ்ந்து வருகிறது. இந்த குழந்தையை பரிசோதித்த மருத்துவர்கள் இதனால் பெரும் ஆச்சரியம் அடைந்துள்ளனர்.

பிரிட்டனை சேர்ந்த ஜான் ஓவன் மற்றும் ஹீலன் ஆகிய தம்பதிக்கு கடந்த நவம்பர் மாதம் அழகான ஆண்குழந்தை பிறந்தது. ஆனால் அந்த குழந்தை பிறந்தவுடன் அழுகவில்லை. எனவே சந்தேகம் அடைந்த மருத்துவர்கள், குழந்தைகள் நல மருத்துவரை கொண்டு சோதனை செய்ததில் அந்த குழந்தை  Laryngeal cleft என்ற அபூர்வ நோய் ஏற்பட்டிருப்பதாகவும், இதனால் இந்த குழந்தையால் அழ முடியாது என்றும் தெரிவித்தனர். மேலும் இந்த குழந்தைக்கு மூச்சுத்திணறல் மற்றும் ஜீரண கோளாறுகளும், மாரடைப்பு நோய் ஏற்படவும் அதிக வாய்ப்பு உள்ளதாக தெரிவித்தனர். 10,000 பேர்களுக்கு ஒருவருக்குத்தான் இந்த அபூர்வ நோய் வரும் என்பது குறிப்பிடத்தக்கது. பிரிட்டனில் மொத்தம் மூன்றே பேர்தான் இந்த நோயினால் தாக்கப்பட்டுள்ளனர்.

britain baby 12

மருத்துவர்கள் கூறியபடியே கடந்த ஒன்பது மாதங்களில் இதுவரை ஏழுமுறை குழந்தைக்கு மாரடைப்பு நோய் ஏற்பட்டுள்ளது. ஆனாலும் குழந்தை அதிசயமாக உயிர் வாழ்ந்துகொண்டிருப்பதை பார்த்து குழந்தையின் பெற்றோர்களும், மருத்துவர்களும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இந்த குழந்தையின் தாய், குழந்தையை “லிட்டில் சோல்ஜர்” என்றுதான் அழைக்கின்றார். அபூர்வமான  நோயை எதிர்த்து போராடி வருவதால் இந்த பெயரை சொல்லி அழைப்பதாக அவர் கூறினார்.

Leave a Reply