பட்டப்பகலில் அமைச்சர் ரமணாவின் சகோதரர் வெட்டி கொலை. திருவள்ளூரில் பதட்டம்

ravi copyதமிழக அமைச்சர் ரமணாவின் சகோதரர் ரவி நேற்று மர்ம கும்பலால் வெட்டிக்கொல்லப்பட்டார். இதனால் திருவள்ளூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அமைச்சர் ரமணாவின் சகோதரர் ரவி, திருவள்ளூர் அருகேயுள்ள வேப்பம்பட்டு என்ற ரயில் நிலையம் அருகே பெருமாள்பட்டு என்ற இடத்தில் வசித்து வந்தார். ரியல் எஸ்டேட் தொழில் செய்யும் ரவி, நேற்று மதியம் தனது வீட்டில் உணவு சாப்பிட்டுவிட்டு அருகில் உள்ள தனது அலுவலகத்திற்கு சென்றுகொண்டிருந்தார்.

அப்போது ஆரம்ப சுகாதார நிலையத்தின் எதிரே, அவர் சென்று கொண்டிருந்தபோது அவருக்கு எதிரே மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேர்கொண்ட  மர்மகும்பல் ஒன்று, அவரை வழிமறித்து பயங்கர ஆயுதங்களால் சரமாரியாக வெட்டிக்கொன்று விட்டு தப்பிச் சென்றுவிட்டது.

பட்டப்பகலில் நடந்த இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தியது.  இந்த சம்பவம் குறித்த தகவல் தெரிந்தவுடன் உடனடியாக அங்கு வந்த செவ்வாய்பேட்டை போலீஸார், கொலையுண்ட ரவியின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக திருவள்ளூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வரும் போலீஸார்,  கொலையாளிகளை பிடிக்கவும் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.

கொல்லப்பட்ட ரவி, அமைச்சர் ரமணாவின் சித்தப்பாவின் மகன் ஆவார். முன்விரோதம் காரணமாக இந்த கொலை நடந்ததா அல்லது வேறு ஏதாவது காரணமா என்பது குறித்து போலீஸார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Leave a Reply