கல்லூரில் சேரும்போது 11வது வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா? நீதிமன்றத்தின் உத்தரவு

கல்லூரில் சேரும்போது 11வது வகுப்பு மதிப்பெண் கணக்கில் எடுத்து கொள்ளப்படுமா? நீதிமன்றத்தின் உத்தரவு

பெரும்பாலான பள்ளிகளில் 11வது வகுப்பு பாடங்களை நடத்தாமல் நேரடியாக 12ஆம் வகுப்பு பாடங்களை நடத்தி வருவதாக குற்றச்சாட்டு எழுந்த நிலையில் இந்த ஆண்டு முதல் 11ஆம் வகுப்பு தேர்வுகளும் பொதுத்தேர்வாக தமிழக அரசு அறிவித்தது.

இந்த நிலையில் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கையின்போது 11ம் வகுப்பு பொதுத்தேர்வு மதிப்பெண்களையும் கணக்கில் எடுத்துக் கொள்வது தொடர்பான அரசாணை ஒன்றையும் அரசு பிறப்பித்திருந்தது.

ஆனால் அரசின் இந்த முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து பொதுநல வழக்கு ஒன்று சென்னை உயர்நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரணை செய்த சென்னை உயர்நீதிமன்றம், இதுகுறித்து கல்வியாளர்களுடன் கலந்தாலோசித்து முடிவெடுக்க பள்ளிக்கல்வித்துறை செயலருக்கு உத்தரவு பிறப்பித்துள்ளது.

Leave a Reply