விஜய்யின் ‘கத்தி’ படத்தால் சரிந்ததா கோக் விற்பனை. ஓர் அதிர்ச்சி அலசல்
உலகின் நம்பர் ஒன் குளிர்பான நிறுவனமாக இருந்து வரும் கோக் நிறுவனத்தின் லாபம் கடந்த ஆண்டில் 55% சரிந்துள்ளதாக சமீபத்தில் செய்தி ஒன்று வெளியாகியுள்ளது. இந்த சரிவு பெரும்பாலும் ஆசிய நாடுகளால் முக்கியமாக இந்தியாவில் ஏற்பட்ட விழிப்புணர்வே காரணம் என கூறப்படுகிறது.
சாப்ட் டிரிங்ஸ் எனப்படும் குளிர்பானங்களை குடிப்பதால் உடலுக்கு தீமை ஏற்படும் என்ற கருத்து பொதுமக்களிடையே விரைவாக பரவி வரும் நிலையில், இந்த நிறுவனங்கள் தங்கள் தயாரிப்புக்காக விவசாய நிலத்தின் தண்ணீரை உறிஞ்சி தங்களது வியாபாரத்திற்கு பயன்படுத்தி வருவதும் மக்களை வெறுப்படைய செய்துள்ளது.
இந்த விழிப்புணர்வு விஜய் நடித்த ‘கத்தி’ திரைப்படம் வெளிவந்த பின்னர் பொதுமக்களிடையே அதிக அளவு ஏற்பட்டுள்ளதாகவும், அந்த படத்தில் கோக் நிறுவனத்திற்கு எதிராக விஜய் பேசிய வசனங்கள் பசுமரத்தாணி போல் மக்கள் மனதில் பதிந்துவிட்ட காரணத்தாலும் கோக் விற்பனை பெருமளவு சரிய ஒரு காரணம் என விற்பனை பிரதிநிதிகள் எடுத்த ஒரு கருத்துக்கணிப்பு கூறுவதாக செய்தி வெளிவந்துள்ளது.
உலகின் முன்னணி நிறுவனம் ஒன்றின் வருமானத்தை ஒரே படத்தின் மூலம் விஜய் சாய்த்துவிட்டதாக ஃபேஸ்புக், டுவிட்டரில் செய்திகள் வெளியாகியுள்ளது. அடுத்த சூப்பர் ஸ்டார் பட்டத்தை நோக்கி சென்று கொண்டிருக்கும் விஜய், இதேபோல் பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் கருத்துக்களை தொடர்ந்து தனது படங்களில் தெரிவித்தார் அவருக்கு சூப்பர்ஸ்டார் பட்டம் மட்டுமின்றி அதுக்கும் மேலே’ சில கெளரவங்களை கொடுக்க தமிழக மக்கள் தயாராக இருப்பதாகவும் கூறப்படுகிறது. ஒரு சமயத்தில் இதே கோக் நிறுவனத்தின் விளம்பர தூதராக இருந்த விஜய், பின்னர் அதன் தீமையை உணர்ந்து அந்த நிறுவனத்தின் விளம்பரத்தில் இருந்து விலகிவிட்டார் என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.