2.5 அடி உயர வாலிபரை திருமணம் செய்த விரல்கள் இழந்த இளம்பெண். சீனாவில் ஒரு அதிசய தம்பதி

2.5 அடி உயர வாலிபரை திருமணம் செய்த விரல்கள் இழந்த இளம்பெண். சீனாவில் ஒரு அதிசய தம்பதி

[carousel ids=”94018,94019,94020,94021″]

சீனாவில் பிறவியிலேயே வளர்ச்சி குறைபாடு உள்ள வாலிபர் ஒருவர் 2.5 அடி மட்டுமே உள்ளார். மேலும் இவரால் கம்பு ஊன்றிதான் நடக்க முடியும். ஆனாலும் காதலுக்கு கண் இல்லை என்று கூறப்படுவதற்கேற்ப இவரையும் ஒரு இளம்பெண் காதலித்து திருமணம் செய்ததோடு கடந்த ஆறு ஆண்டுகளாக அவருடன் ஒற்றுமையுடன் குடும்பம் நடத்தி வருகிறார்.

Dong Zhijun என்ற 29 வயது நபரும் Yuan Wanyu என்ற 27 வயது இளம்பெண்ணும் தான் இந்த அதிசய தம்பதிகள். கடந்த ஆறு ஆண்டுகளாக தனது கணவருடன் அன்புடனும் பிரியத்துடனும் வாழ்ந்து வருவதாகவும், தனது கண்களுக்கு அவரிடம் எந்த குறையும் தென்படவில்லை என்றும் Yuan Wanyu சமீபத்தில் அளித்த பேட்டி ஒன்றில் கூறியுள்ளார்.

மேலும் Yuan Wanyu, ஒரு வயதாக இருக்கும்போது தீ விபத்து ஒன்றில் தன்னுடைய கைகளின் விரல்களையும் இழந்ததோடு முகத்திலும் பெரிய பாதிப்பு அடைந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஒருவர் குறையை மற்றொருவர் கண்டுகொள்ளாமல் ஒற்றுமையாக வாழ்ந்து வரும் இந்த தம்பதிக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது.

Leave a Reply