ஃபாஸ்ட் ஃபுட் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

ஃபாஸ்ட் ஃபுட் ஏற்படுத்தும் பாதிப்புகள் என்னென்ன தெரியுமா?

fastfoodஎப்போதாவது ஒரு நாள், மாதத்துக்கு ஒரு நாள் ஃபாஸ்ட் ஃபுட் எடுத்துக்கொள்வதில் பிரச்னை இல்லை. அதுவே தொடரும்போதுதான் பாதிப்புகள் ஏற்படுகின்றன. தொடர்ந்து ஃபாஸ்ட் ஃபுட் சாப்பிட்டுவந்தால் ஏற்படக்கூடிய பாதிப்புகள்:

உயர் ரத்த அழுத்தம்

சர்க்கரை நோய்

கொழுப்பு அளவு அதிகரிப்பு

இதய நோய்கள்

ஹெபடைட்டிஸ், டைஃபாய்டு உள்ளிட்ட தொற்று நோய்கள்

ஈ மொய்த்த உணவுகள் உட்கொள்வதால் வயிற்றுப்போக்கு உள்ளிட்ட நோய்கள்

ஃபாஸ்ட் ஃபுட் டிப்ஸ்!

பாக்கெட் உணவுகளில் உள்ள ஊட்டச்சத்து லேபிளைச் சரிபார்க்கக் கற்றுக்கொள்ள வேண்டும். அதில் இருக்கும் பாலி அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட், மோனோ அன்சாச்சுரேட்டட் ஃபேட்டி ஆசிட், டிரான்ஸ் ஃபேட் ஆகியவற்றை ஒப்பிட்டுப்பார்த்து வாங்க வேண்டும்.

ரெடிமேட் இன்ஸ்டன்ட்  உணவுகளான இன்ஸ்டன்ட் இட்லி மாவு, இன்ஸ்டன்ட் மசாலா, காபி பவுடர், இடியாப்பம், நூடுல்ஸ், ஃப்ரைடு ரைஸை முடிந்தவரை தவிர்ப்பது நல்லது.

ரெடிமேட் உணவின் அளவுக்குச் சரிசமமாக,  காய்கறிகளையும் பழங்களையும், பருப்பு வகைகளையும் எடுத்துக்கொண்டால், பாதிப்பைக் குறைக்கலாம்.

40 வயதுக்கு மேற்பட்டவர்கள், சோடியம் சேர்த்த உணவைச் சேர்த்துக்கொள்வதைத் குறைத்துக்கொள்ள வேண்டும்.

மைதா உணவுகளை உட்கொள்ளாமல் இருப்பதே நல்லது. கட்டாயம் ஏற்பட்டால், சுகாதாரம் இல்லாத உணவகங்களைத் தவிர்ப்பது நல்லது. முக்கியமாக, சமையலுக்குப் பயன்படுத்தும் எண்ணெயின் தரத்தைச் சோதிக்க வேண்டும்.

சூப்பர் மார்க்கெட்டில் விற்கப்படும் பதப்படுத்தப்பட்ட பொருட்களின் பிராண்டு தரத்தை விளம்பரங்களைப் பார்த்து நிர்ணயிக்கக் கூடாது. ஜாம், குளிர்பானங்கள், உலர் பழங்களால் ஆன உணவுப் பண்டங்கள், ஊறுகாய், பழங்களைப் பதப்படுத்தி தயாரிக்கப்பட்ட உணவுகள் ஆகியவற்றில் இந்திய அரசின் தரக் கட்டுப்பாடான எஃப்.பி.ஓ (FPO) மார்க் உள்ளதா எனப் பார்க்க வேண்டும்.

பானிபூரி, சமோசா, பேல் பூரி போன்றவற்றை வீட்டிலேயே தயாரித்துச் சாப்பிடலாம். வீட்டில் தயாரிக்கப்படும் தின்பண்டங்களான முறுக்கு, பஜ்ஜி, உருளைக்கிழங்கு சிப்ஸ் ஆகியவற்றை பாலி அன்சாச்சுரேட்டட் கொழுப்பு அமிலம் அதிகமாக உள்ள நல்லெண்ணெய், சூரியகாந்தி எண்ணெயைக் கொண்டு தயாரிக்கலாம்.  இதில், உடலுக்குத் தேவையான ஒமேகா 6 கொழுப்பு அமிலம் உள்ளது.

ஒருநாள் ஊட்டச்சத்து தேவை எவ்வளவு எனப் பட்டியலிடுவதுபோல், அளவுக்கு மீறாக்கூடாதவை என சில கட்டளைகளை இதய நோய் சிகிச்சை நிபுணர்கள் பரிந்துரைக்கின்றனர். ஆரோக்கியமான நபர் ஒருவர், ஒரு நாளைக்கு எடுக்கும் உணவில் டிரான்ஸ் ஃபேட் அளவு இரண்டு கிராமுக்கு மிகாமல் இருக்க வேண்டும். சாச்சுரேட்டட் ஃபேட் 16 கிராமுக்கு மிகாமலும்,  சோடியம்  2,300 மி.கி மிகாமலும், சர்க்கரை 25 – 38 கிராமுக்கு மிகாமலும் இருக்க வேண்டும் என்கின்றனர். ஆனால், ஃபாஸ்ட் ஃபுட், பிராசஸ்டு ஃபுட், பாக்கெட்டில் அடைக்கப்பட்ட பதப்படுத்தப்பட்ட உணவுகளில் மேலே சொன்ன அளவுகளைத் தாண்டி இவை இருக்கின்றன. இதனால், கொழுப்பு அதிகரிப்பதால் மாரடைப்பும், சர்க்கரை அதிகரிப்பதால் சர்க்கரை நோயும், சோடியம் அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம் வருவதற்கான வாய்ப்ப்பு அதிகரிக்கிறது.

Leave a Reply