மீத்தேன் வாயு எடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? வல்லுனர் குழுவின் ஆய்வறிக்கை

மீத்தேன் வாயு எடுத்தால் ஏற்படும் பாதிப்புகள் என்ன? வல்லுனர் குழுவின் ஆய்வறிக்கை
methane
தஞ்சை காவிரி டெல்டா பகுதிகளில் மீத்தேன் வாயு எடுக்க பல்வேறு அமைப்புகள் மற்றும் அரசியல் கட்சிகள் போராட்டம் நடத்தியதை அடுத்து தமிழக அரசு மீத்தேன் எடுக்க சமீபத்தில் தடை விதித்தது. இதற்கு அனைத்து தரப்பில் இருந்தும் தமிழக அரசுக்கு பாராட்டுக்கள் குவிந்து வருகிறது. இந்நிலையில் மீத்தேன் வாயு எடுக்கும் இடத்தில் பூகம்பம் ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதாக வல்லுநர் குழு அளித்த பரிந்துரையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டுள்ளது.

மீத்தேன் வாயு எடுப்பதால் ஏற்படும் தீமைகள் குறித்து வல்லுநர் குழு தனது ஆய்வு அறிக்கையில் தெரிவித்துள்ளதாவது: 1.  நிலத்தடி நீர் எடுப்பதால் உண்டாகும் நில அமைப்பியல் மாற்றம் மற்றும் அதனால் நிலநடுக் கம் ஏற்பட வாய்ப்பு உள்ளது.

2. நிலத்தடி நீர்மட்டம் வெகு ஆழத்துக்குக் கொண்டு செல்ல நேரிடும். ஆழ்துளைக் கிணறுகளின் கூட்டுத் தொகுதி குறுக்கும் நெடுக்குமாகச் செல்வதால் இப்பகுதியின் சுற்றுச்சூழல் பாதிக்கப்படுவதுடன், அழகான இயற்கையான அமைப்பும் மாறக்கூடும்.

3. மீத்தேன் வாயு கசிவு, விஷவாயு வெளியேற்றம் அப்பகுதியில் வளி மண்டல வெப்பநிலை மாற்றத்தை ஏற்படுத்தும். மழை அளவு குறை வதற்கும் வாய்ப்புகள் உண்டு.

4. மீத்தேன் வாயு எடுக்கப்பட்ட பின்னர் இப்பகுதியில் ஏற்படுத்தப்பட்ட ஆயிரக்கணக்கான கிணறுகளை தூர்க்கவோ, மீண்டும் பயன்படுத்தவோ முடியாது.

5. வாயு கொண்டுசெல்லும் குழாய்களில் ஏற்படும் வாயு கசிவு, அதனால் ஏற்படும் பெருவெடிப்பு இப்பகுதியில் உள்ள மக்களின் உயிர், உடைமை மற்றும் சுற்றுச்சூழலுக்கு பெரும் பாதிப்பை ஏற்படுத்தும்

இவ்வாறு வல்லுனர் குழுவின் ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply