புத்தக்கத்தின் உதவியால் சுத்தமான தண்ணீர் கிடைக்குமா? ஒரு அபூர்வ வீடியோ

புத்தக்கத்தின் உதவியால் சுத்தமான தண்ணீர் கிடைக்குமா? ஒரு அபூர்வ வீடியோ
water
பொதுமக்களுக்கு சுத்தமான குடிதண்ணீரை கொடுக்க வேண்டும் என உலகின் பல்வேறு நாடுகள் புதுப்புது விதமான கண்டுபிடிப்புகளின் மூலம் முயற்சி செய்து கொண்டிருக்கும் நிலையில் கனடா நாட்டு விஞ்ஞானி ஒருவர் புத்தக்கத்தின் உதவியால் சுத்தமான குடிநீரை பொதுமக்களுக்கு வழங்கலாம் என்று கண்டுபிடித்துள்ளார்.

 கனடா நாட்டைச் சேர்ந்த பிரபல விஞ்ஞானியான தெரசா என்பவர் கண்டுபிடித்துள்ள புத்தகம் மூலம் தண்ணீரை வடிகட்டி சுத்தமான குடிநீரை தயாரிக்க முடியும் என்று நிரூபித்துள்ளார். உலகில் 663 மில்லியன் மக்கள் சுத்தமான குடிநீர் இல்லாமல் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டு வரும் நிலையில், இந்தப் புதிய கண்டுபிடிப்பு, உலகம் முழுவதிலும் உள்ள பல கோடி மக்களுக்குச் சுத்தமான, பாதுகாப்பான குடிநீர் கிடைக்க வழிவகை செய்யும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த புத்தகத்தைத் திறந்து ஒரு தாளை எடுத்து, அதன் மீது தண்ணீரை ஊற்றினால், மிக சுத்தமான தண்ணீர் கிடைக்கிறது. மிகச் சிறிய வெள்ளி, மற்றும் செம்புத் துகள்களால் இந்த புத்தகத்தின் பக்கங்கள் தயாரிக்கப்பட்டிருப்பதால், இவற்றின் வழியாக நீர் செல்லும்போது, 99 சதவிகித பாக்டீரியாக்கள் கொல்லப்பட்டு சுத்தமான தண்ணீர் கிடைக்கின்றது.

கனடாவில் உள்ள மெக்கில் பல்கலைக்கழகத்தின் ஆராய்ச்சியாளரான தெரசா டான்கோவிச் என்பவரின் கடின உழைப்பில் தான் தண்ணீரைச் சுத்தப்படுத்தும் இந்தப் புத்தகம் உருவாகியிருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த ஒரு புத்தகம் ஒரு மனிதரின் தண்ணீர்த் தேவையை 4 ஆண்டுகளுக்கு தீர்த்து வைக்கும் வல்லமை படைத்தது. விரைவில் இயந்திரங்கள் மூலம் அதிக எண்ணிக்கையில் இந்த புத்தகங்கள் தயாரிக்கப்பட இருக்கின்றன.

Leave a Reply