பிரசவத்திற்காக இங்கிலாந்து இளவரசி கேட் மிடில்டன் மருத்துவமனையில் அனுமதி.

kate middletonஇங்கிலாந்து இளவரசி கேத் மிடில்டன் இரண்டாவது முறையாக கர்ப்பமாகியுள்ள நிலையில் குழந்தை எப்பொழுது வேண்டுமானாலும் பிறக்க வாய்ப்பு இருப்பதாக மருத்துவர்கள் கூறியதை அடுத்து அவர் இன்று இங்கிலாந்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளிவந்துள்ளது.

இங்கிலாந்து நேரப்படி இன்று காலை 6 மணிக்கு கேத் மிடில்டன்  செயிண்ட் மேரீ’ஸ் மருத்துவமனையில் அட்மிட் ஆனதாகவும், பிரசவத்திற்கு அந்த மருத்துவமனையின் மருத்துவர்கள் தயார் நிலையில் இருப்பதாகவும் செய்திகள் கூறுகின்றன.

உலகின் முன்னணி ஊடகங்கள் அனைத்தும் மருத்துவமனை வாசலில் குழந்தை பிறந்த செய்தியை அறிய ஆவலுடன் கேமிராக்களுடன் காத்து கொண்டிருக்கின்றன. கேத் மிடில்டனின் மகன் ஜார்ஜ் அரண்மனையில் தனது தாத்தா மற்றும் பாட்டியுடன் இருப்பதாகவும், தனது உடன்பிறப்பு பிறந்ததை அறிய அவரும் ஆவலுடன் உள்ளதாகவும் செய்தியாளர்கள் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply