பிரபல ஓவியர் கோபுலு மரணம்.

gopuliபிரபல ஓவியர் மற்றும் அரசியல் கார்ட்டூனிஸ்ட் ஆக புகழ்பெற்று விளங்கிய ஓவியர் கோபுலு உடல்நலக் கோளாறு காரணமாக சென்னையில் இன்று மரணம் அடைந்தார். அவருக்கு வயது 91. கடந்த சில நாட்களாக உடல்நலமின்றி சிகிச்சை பெற்று வந்த ஓவியர் கோபுலு, இரண்டு நாட்களுக்கு முன்னர் சென்னை, இசபெல்லா மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். மருத்துவர்கள் அவருக்கு தொடர்ந்து சிகிச்சை அளித்து வந்த நிலையில் சிகிச்சையின் பலனின்றி நேற்று இரவு 7.30 மணியளவில் அவர் மரணம் அடைந்தார். ஓவியர் கோபுலுவின் மனைவி சில மாதங்களுக்கு முன்புதான் மரணம் அடைந்தார் என்பது குறிப்பிடத்த்தக்கது.

ஓவியர் கோபுலுவின் ஒரே மகன் தற்போது அமெரிக்காவில் வசித்து வருகிறார். தந்தை இறந்த செய்தி அறிந்து உடனடியாக அவர் நாடு திரும்பிக்கொண்டிருப்பதாக செய்திகள் கூறுகின்றன.

கடந்ஹ 1924ஆம் ஆண்டு தஞ்சையில் பிறந்த ஓவியர் கோபுலு, பிரபல வார இதழான ஆனந்த விகடன் வார இதழில் ஓவியங்கள் வரைந்ததன் மூலம் பெரும்புகழ் பெற்றார். இந்தியாவுக்கு சுதந்திரம் கிடைத்தபோது ஓவியர் கோபுலு விகடனில் வரைந்த ஓவியம் அனைவராலும் பாராட்டப்பட்டது. இதேபோல், ஆனந்த விகடனில் வெளிவந்த ‘தில்லானா மோகனாம்பாள்’, ‘துப்பறியும் சாம்பு’ போன்ற பல்வேறு தொடர்கதைகளுக்கும், கோபுலு வரைந்த ஓவியங்கள் பெரிதும் பேசப்பட்டன. மேலும், கோபுலு, வெறும் ஓவியராக மட்டுமின்றி, சிறந்த அரசியல் கார்டூனிஸ்டாகவும் வெற்றிக் கண்டவர்.

Leave a Reply