2017-ன் முதல் குழந்தையாக இந்திய வம்சாவளி குழந்தை தேர்வு

2017-ன் முதல் குழந்தையாக இந்திய வம்சாவளி குழந்தை தேர்வு

2017ஆம் ஆண்டின் முதல் குழந்தையாக பிரிட்டன் நாட்டை சேர்ந்த இந்திய வம்சாவளி தம்பதியான பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியருக்கு மிகச்சரியாக 00.01 மணிக்கு பெண் குழந்தை பிறந்துள்ளது.

2017ஆம் ஆண்டு நியூசிலாந்தில்தான் முதல்முதலில் கொண்டாடப்பட்டு வருகிறது. அந்நாட்டின் நேரப்படி பிறக்கும் முதல் குழந்தையே உலகின் முதல் குழந்தையாக கருதப்படும்

அந்தவகையில் பாரதி தேவி-அஷ்வானி குமார் தம்பதியரின் குழந்தையான எல்லினாகுமாரி இந்த பெருமையை பெற்றுள்ளது. 2.72 கிலோ எடையுடன் கூடிய இந்த குழந்தை ஆரோக்கியமாக உள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இந்த தம்பதியருக்கு ஏற்கனவே ஆரிவ் குமார் என்ற 2 வயது ஆண் குழந்தை உள்ளது. 2வது குழந்தை பெண்ணாகப் பிறந்தது, குறிப்பாக இந்த ஆண்டின் முதல் குழந்தையாக பிறந்தது பாரதி-அஷ்வானி தம்பதியர் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளனர்.

Leave a Reply