கமல்ஹாசனின் விசில் செயலியில் முதல் புகார்
நடிகர் கமல்ஹாசன் சமீபத்தில் விசில் என்ற செயலியை அறிமுகம் செய்தார். இந்த செயலியில் கமல் கட்சியில் உறுப்பினராக இருப்பவர்கள் நாட்டில் நடக்கும் தவறுகளை சுட்டிக்காட்டலாம் என்று தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த செயலியில் நேற்று முதல் புகார் பதிவாகியுள்ளது. அந்த புகாரில் சென்னை அருகேயுள்ள அனகாபுத்தூரில் உள்ள தோல் தொழிற்சாலைகளின் கழிவு நீர், அங்கிருக்கும் ஆற்றில் கலந்து நீர் மாசு ஏற்படுத்துவதாக புகார் செய்யப்பட்டிருந்தது.
இந்த நிலையில் இந்த புகார் குறித்து கமல்ஹாசன் தனது டுவிட்டரில் கூறியதாவது: மக்கள் நீதி மய்யம்பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது. மக்கள் நீதி மய்யம்பெருமளவு வேலை வாய்ப்புகள் வழங்கி வரும் தொழிற்சாலைகளுக்கு எதிரானது அல்ல.ஆனால் வணிகம் மற்றும் வேலை வாய்ப்பின் பெயரில் நிகழும் கொடுமையான மாசுகளுக்கு எதிரானது என்று கூறியுள்ளார்.
https://twitter.com/ikamalhaasan/status/992034394347945984
https://twitter.com/ikamalhaasan/status/992034396445200385