3000 ஆண்டுகால பழமையான ரோம் நகருக்கு முதல் பெண் மேயர்

3000 ஆண்டுகால பழமையான ரோம் நகருக்கு முதல் பெண் மேயர்
rome mayor
உலகின் மிக பழமையான நகரங்களில் ஒன்று இத்தாலியின் தலைநகர் ரோம். சுமார் 3000 ஆண்டுகளுக்கு முன்னரே தோன்றிய இந்த நகரத்தில் நேற்று மேயர் தேர்தல் நடைபெற்றது.

இந்த தேர்தலில் ஆளும் குடியரசு கட்சியின் சார்பில் ராபர்ட்ரோ கியாச்செட்டி என்பவரும்,  பைவ் ஸ்டார் கட்சியின் வேட்பாளராக பிரபல பெண் வழக்கறிஞர் விர்ஜினியாராகி என்பவரும் போட்டியிட்டனர்.

இந்நிலையில் நேற்று மேயர் தேர்தல் நடைபெற்று மாலையே வாக்குகள் எண்ணப்பட்டன. இதில்  பைவ் ஸ்டார் கட்சியின் வேட்பாளர் விர்ஜினியா ராகி வெற்றி பெற்றார். ரோம் நகரின் முதல் பெண் மேயர் இவர்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

ரோம் நகர மாநகராட்சி நிர்வாகத்தால் வெகுகாலமாக தீர்க்கப்படாமல் இருந்த பொது போக்குவரத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்சனைகளால் ஆளும்கட்சி மீது ஆத்திரத்தில் இருந்த ரோம் நகரவாசிகள் ஆளும்கட்சிக்கு எச்சரிக்கையாக இந்த தேர்தல் முடிவை அளித்துள்ளதாக இத்தாலிய ஊடகங்கள் குறிப்பிட்டுள்ளன.

Leave a Reply