பாலஸ்தீனம் சென்ற முதல் இந்திய பிரதமர்: மோடிக்கு அமோக வரவேற்பு

பாலஸ்தீனம் சென்ற முதல் இந்திய பிரதமர்: மோடிக்கு அமோக வரவேற்பு

பாலஸ்தீன நாட்டுக்கு முதல்முறையாக செல்லும் இந்திய பிரதமர் என்ற பெருமை பெற்ற பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு அங்கு உற்சாக வரவேற்பு கிடைத்தது. பாலஸ்தீனம் சென்றதும் பிரதமர் மோடி முதலில்ல் யாசர் அராஃபத் நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தினார்.

மேற்காசிய மற்றும் வளைகுடா நாடுகளுக்கு 4 நாள் அரசு முறை சுற்றுப் பயணமாக நேற்று ஜோர்டான் சென்ற பிரதமர் மோடி அந்நாட்டு மன்னர் 2-ஆம் அப்துல்லாவுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பேச்சுவார்த்தை நடத்தினார். இந்நிலையில் இன்று ஜோர்டானின் அம்மான் நகரில் இருந்து பாலஸ்தீனத்தின் ரமல்லா நகருக்கு பிரதமர் மோடி சென்றடைந்தார். அங்கு யாசர் அராஃபத்தின் நினைவிடத்தில் பிரதமர் மோடி அஞ்சலி செலுத்தினார்.

பாலஸ்தீன அதிபர் முகமது அப்பாசுடன் இருதரப்பு உறவுகள் குறித்து பிரதமர் மோடி பேச்சுவார்த்தை நடத்தவுள்ளார். அப்போது முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தாகும் என்றும் கூறப்படுகிறது.

Leave a Reply