ஒலிம்பிக் ஜிம்னாஸ்டிக் போட்டியில் பங்குபெற தகுதி பெற்ற முதல் பெண் வீராங்கனை.
பிரேசில் நாட்டில் நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டியில் விளையாட இந்திய ஜிம்னாஸ்டிக் வீராங்கனை தீபா கர்மார்க்கர் என்பவர் தகுதி பெற்றுள்ளார். இந்தியாவில் இருந்து ஒரு பெண் ஜிம்னாஸ்டிக் வீராங்கனை ஒலிம்பிக் போட்டியில் கலந்து கொள்வது இதுதான் முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
திரிபுரா மாநிலத்தை சேர்ந்த 22 வயது தீபா நேற்று நடைபெற்ற தகுதிச்சுற்றில் 52.698 புள்ளிகள் பெற்று ஒலிம்பிக் போட்டியில் விளையாட தகுதி பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது
இதற்கு முன்னர் ஆண் வீரர்கள் மட்டுமே 1952, 1956, 1964 ஆகிய ஆண்டுகளில் ஒலிம்பிக் போட்டியில் ஜிம்னாஸ்டிக் போட்டிகளில் விளையாட தகுதி பெற்றுள்ளனர். தீபா கர்மார்க்கர் அவர்களுக்கு நமது சென்னை டுடே நியூஸ் சார்பில் மனமார்ந்த வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்