டோக்கியோ நகரின் முதல் பெண் கவர்னர் பதவியேற்பு

டோக்கியோ நகரின் முதல் பெண் கவர்னர் பதவியேற்பு

tokyo governorஅமெரிக்காவின் அடுத்த அதிபர் மற்றும் ஐ.நா சபையின் அடுத்த பொதுச்செயலாளர் ஆகிய இருவருமே பெண்ணாக இருக்க வாய்ப்புகள் அதிகம் என்ற தகவல்கள் வெளிவந்து கொண்டிருக்கும் நிலையில் ஜப்பான் நாட்டின் தலைநகர் டோக்கியோ நகரின் புதிய யுரிகோ கோய்கி என்ற 64 வயது பெண் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இதற்கு முன்னர் கவர்னராக இருந்த யோய்சி மசூசோ மீது ஊழல் புகார் கூறப்பட்டதால் அவர் தனது பதவியை ராஜினாமா செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

டோக்கியோவின் புதிய கவர்னராக தேர்வு செய்யப்பட்ட யுரிகோ கோய்கி, ஜபான் பிரதமர் ஷின்ஷோ அபேயின் லிபரல் ஜனநாயக கட்சியை சேர்ந்தவர் என்பதும் இவர் முன்னாள் ராணுவ அமைச்சராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

இருப்பினும் இவர் கட்சியின் சார்பில் கவர்னர் பதவிக்கு போட்டியிடாமல் சுயேட்சையாக போட்டியிட்டு 29 லட்சம் ஓட்டுகள் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளார். வெற்றி பெற்ற பின்னர் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த யுரிகோ, ‘இதற்கு முன்பு நடைபெற்ற நிகழ்வுகள் எதுவும் ஏற்படாத வகையில் டோக்கியோவை வழிநடத்துவேன் என்றும் அதன் மூலம் எப்போதும் கண்டிராக டோக்கியோவை நீங்கள் காண்பீர்கள் என்றும் நம்பிக்கை அளித்தார்.

எகிப்து கெய்ரோ பல்கலைக் கழகத்தில் பட்டப்படிப்பு படித்த யுரிகோ கொய்கி அரசியலுக்கு வருவதற்கு முன்பு டி.வி நிருபராக பணிபுர்ந்தார் என்பது குறிப்பிடத்தகக்து.

Leave a Reply